எங்கள் ஃப்ளையர் பதிவிறக்க

இந்த தகவலை தமிழில் அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். தயவு செய்து கவனிக்க: மேலுள்ள முக்கிய மெனுவில் இணைப்புகள் கூடுதல் தகவல்களுக்கு ஆங்கிலத்தில் மட்டுமே. உங்களுக்கு உதவி அல்லது மேலும் தகவல் தேவைப்பட்டால் தயவு செய்து தொலைபேசி எண் 1-866-278-3123 அழையுங்கள் அல்லது info@welcomecentre.ca மின்னஞ்சல் அனுப்பவும்.

தேவையான அனைத்து சேவைகளும்... ஒரே இடத்தில்!

யோக் பிராந்தியத்தில் சிக்கல் மிக்கதாய்த் தோன்றும் தகவல் மற்றும் மூலவளத் திட்டங்களூடாக குடி வருபவர்களுக்கு வழி நடத்துதலையும் ஆதரவையும் வெல்கம் சென்டர் குடிவரவுச் சேவைகள்

ஒரே இடத்தில் வழங்குகிறது.

சேவைகள் கட்டணமில்லாமல் இலவசமாக வழங்கப்படுகிறது.

சென்டரைப்பற்றி

யோக் பிராந்தியத்தில் சிக்கல் மிக்கதாய்த் தோன்றும் தகவல் மற்றும் மூலவளத் திட்டங்களூடாக குடி வருபவர்களுக்கு வழி நடத்துதலையும் ஆதரவையும் வெல்கம் சென்டர் குடிவரவுச் சேவைகள் ஒரே இடத்தில் வழங்குகிறது.

முக்கிய குடிவரவுச் சேவைகள் உள்ளடக்குபவை: குடியமர்வு மற்றும் ஒன்று கலப்பதற்கான சேவைகள்; மொழிப்பயிற்சி; சான்றிதழ் மற்றும் தகைமைகளுக்கான உதவி; வேலை தேடிட ஆதரவு.

ஏனைய சேவைகள் சமூகத்தின் தேவைகளைப் பொறுத்து நிர்ணயிக்கப்படும் (சட்ட சேவைகள், மனநலச் சேவைகள், கலாசாரத்திற்குப் பொருத்தமான குடும்ப ஆலோசனை போன்றவை)

பின் வருவன உட்பட, குடி வருபவர்களுக்கு சேவை வழங்கும் ஐந்து அமைப்புகளின் தனித்துவம் வாய்ந்த கூட்டுறவால் இது நிர்வகிக்கப் படுகிறது. COSTI Immigrant Service, Catholic Community Services of York Region (CCSYR), Centre for Immigrant and Community Services (CICS), 移民綜合服務中心(華諮處), 移民综合服务中心(华咨处), Job Skills மற்றும் Social Enterprise for Canada.

ஏன்?

1990களிலிருந்தே யோக் பிராந்தியத்தின் குடி வருவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து கொண்டே வருகிறது. அத்தோடு அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான சேவைகள் அதே அளவிற்கு வளரவில்லை.

யோக் பிராந்தியத்தில் ஏனைய பகுதிகளை விட குடி வருவோருக்கான சேவைகள் குறைவாகக் கிடைக்கப்பெறும் பகுதி என்பதால், முன்னெடுத்து வைக்கப்பட்டுள்ள சேவை வலை வேலையை அமைக்க, வாக்ஹன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

யார்?

பொருளாதார மற்றும் சமூக ரீதியில் கனடியத் தொழிலாளர் சந்தைக்குள் ஒன்று படுவதற்கு உதவக்கூடிய ஆதரவுகளும் மூல வளங்களும் தேவைப்படும் குடி வருவோர் மற்றும் புதிதாக வருவோருக்கு.

எப்படி?

ஒரே இடத்தில், ஒருங்கமைக்கப்பட்ட, ஒன்று படுத்தப்பட்ட கேஸ் நிர்வாக அமைப்பின் மூலமாக வடிக்கையாளர்கள் பல் வேறு பட்ட குடி வருவோர் சேவைகள் மற்றும் அனுபவம் வாய்ந்தவர்களிடமிருந்து தகவல்கள் ஆகியவற்றை அடையக்கூடியதாக இருக்கும்.

சேவைகள்

குடியமர்வு மற்றும் ஒன்று கலப்பதற்கான சேவைகள்

வீடுகள், உடல் நலப் பராமரிப்பு, சோசியல் இன்சூரன்ஸ் இலக்கம், பிள்ளை பராமரிப்பு, சமூக மற்றும் அரசாங்க மூல வளங்கள், அடிப்படைத் தேவைகள் அத்தோடு இன்னும் பலவற்றிற்கான உதவி.

ஆங்கில மொழி வகுப்புகள்

தகுதி பெறும் நபர்களுக்கு கம்பியூட்டர் உதவியுடனான ஆங்கில வகுப்புகள், பிள்ளை பராமரிப்பு மற்றும் போக்குவரத்து சலுகை.

அங்கீகாரம் மற்றும் தகைமைகளுக்கான உதவி

சர்வதேச ரீதியில் பயிற்றுவிக்கப்பட்ட உத்தியோகஸ்தர்களுக்கு உரிய தகவல், அங்கீகாரம் (அக்கிரெடிடேஷன்) பெறுவது தொடர்பான உதவி, அங்கீகார ஆவணங்களுக்கான (அக்கிரெடிடேஷன் போட்போலியோ) உதவி மற்றும் செயற்பாட்டுத் திட்டங்கள்.

வேலை தேடிட ஆதரவு சேவைகள்

வேலை தேடும் பட்டறை வகுப்புகள், ரெசுமி தயாரிக்க உதவி, வேலைக்குத் திரும்பிச் செல்ல உதவும் செயற்பாட்டுத் திட்டம், வேலை தேடிட உதவும் மூல வளங்கள், இலவச இன்டர்நெட் மற்றும் தொலை நகல் சேவைகள்.

மொழி ஆதரவுகள்

பத்திரங்களை மொழி மாற்றம் செய்தல் மற்றும் மொழி பெயர்ப்புச் சேவைகள்.

ஏனைய சேவைகள்

ஏனைய சேவைகள் சமூகத்தின் தேவைகளைப் பொறுத்து நிர்ணயிக்கப்படும் (சட்ட சேவைகள், மன நலச்சேவைகள், கலாசாரத்திற்குப் பொருத்தமான குடும்ப ஆலோசனை போன்றவை)

அறிவுறுத்தல்கள்:

  • நீங்கள் தெரிவு செய்யும் பாஷைக்குரிய தொலை பேசி இலக்கத்தை டயல் செய்யவும். (1-866-278-3123)
  • உங்களுடைய பாஷையில் பதிவு செய்யப்பட்ட ஒரு செய்தியை நீங்கள் கேட்பீர்கள்.
  • வரவேற்பு நிலையத்தால் வழங்கப்படும் சேவைகளின் சுருக்கமான விளக்கத்தை பதிவுச்செய்தி தரும்.
  • பிறகு இந்த சேவைகளில் எவை உங்கள் ஆர்வத்துக்குரியவை என கேட்கப்படுவதோடு, உங்கள் பெயர், தொலைபேசி இலக்கம், மற்றும் மொழி பெயர்ப்பாளர் ஒருவர் உங்களைத் தொடர்பு கொள்ள சரியான நேரம் ஆகியவற்றைத் தரும்படி கேட்கப்படுவீர்கள்.
  • உங்கள் பாஷையில் சரளமாகப் பேசும் மொழிபெயர்ப்பாளர் அடுத்த வியாபார நாளுக்குள் உங்களைத் தொடர்பு கொள்வார்.
  • நீங்கள் வரவேற்பு நிலையத்திற்கு விஜயம் செய்ய ஒரு நியமனத்தை மொழிபெயர்ப்பாளர் ஏற்பாடு செய்வதோடு அங்கு உங்களுக்கு ஒரு மொழி பெயர்ப்பாளர் வந்திருப்பதையும் அவர் உறுதி செய்வார். இந்த சேவை உங்களுக்கு இலவசமாகும்.